மாண்புமிகு மக்களாட்சி!
மாண்புமிகு மக்களாட்சி! நமது நாடு பழம்பெருமை மிக்க கலாச்சாரத்தையும் அரசியலில் நுணுக்கமான பல முன்னெடுப்புகளையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முன்னெடுத்துள்ளதாக வரலாற்று குறிப்புகளும் இதிகாச புராணங்களும் கூறுகின்றன. மக்களாட்சி என்ற ஆட்சிமுறை சுதந்திரத்திற்கு பின்தான் நாம் பின்பற்றுகிறோம் என்ற எண்ணம் சிலருக்கு இருப்பது நம்மால் காண முடிகிறது. அதுவே உண்மையாக இருப்பினும், அதை வாங்க நம் முன்னோர்களான சுதந்திர போராட்ட வீரர்கள் பாடுப்பட்டது தான் எத்தனை என்பதை ‘இந்திய தேசிய இயக்க வரலாறு’ நமக்கு காண்பிக்கின்றன. நம் மக்களாட்சி எத்தகைய பழமை வாய்ந்தது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு நமது முதல் இதிகாசமான இராமாயணத்தில் காணலாம். இராமனின் தந்தையான தசரத சக்கரவர்த்திக்கு 60000 ஆண்டுகள் நாட்டை ஆண்ட பின், இராஜ்ஜியத்தைத் தனது மகனான இராமருக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அப்பொழுது அவர் மன்னராட்சி முறையிலேயே தான் ஆட்சி புரிந்துவந்தார். மன்னராட்சி முறையில் தந்தைக்குப் பிறகு மகன் தான் நாடாள வேண்டும் என்பது எழுதப்படாத விதி. தசரதருக்குப் ப...