பெற்றோரைப் பேணுவோம்!
இளமையும் முதுமையும் வயதால் மட்டும் வருவதல்ல. வெளிப்புறத் தோற்றம் ஒருவரை இளமையாக காட்டினாலும், மனதளவில் துவண்டு, எப்போதும் சோர்ந்து, எதெற்கெடுத்தாலும் மனதில் கவலை மற்றும் பிற எதிர்மறையான எண்ணங்கள் நமது பலத்தைக் குறைத்துவிடுகின்றன. மனதளவில் பலத்தைக் குறைக்ககூடிய செயல்கள் நமது பலத்தைக் குறைப்பது போல, இளைமையில் வீர்யத்துடன் நாம் செய்ய வேண்டிய நற்செயல்களையும் செய்ய முடியாமல் சென்றுவிடும். முதுமையான காலத்தில் மகிழ்வுடன் இருப்பது மிகவும் அவசியம். முதியவர்களுக்கு அத்தகைய மகிழ்வானது தங்களது பிள்ளைகளாலேயே பெரும்பாலும் கிடைக்கும் . இளமையில் மனதளவில் பலத்தை இழந்தவர்கள், பெற்றோர்களுக்கு செய்யும் கடமைகளையும் மறந்து செய்ய முடியாமல் தவிக்கின்றனர். அத்தகைய தவிப்பு, அவர்களின் மனதை வறுத்தமுறச் செய்கின்றது. சிலருக்கு, தங்களின் பெற்றோர்கள் குறித்த கவலை ஏதும் இல்லாமலும் இருக்கின்றனர். இக்காலத்தில், ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம் ஆகியவை நிரம்பி வழிவதைக் காண்கின்றோம். நமது பாரத திருநாட்டில், பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்ட மதிப்புகள் நாளடைவில் சீர்குலைந்து வருகின்றன. இளைஞர்கள் மனதளவில் பலமாக இருந்தால்...