உருவம் உண்மையாகாது!


உருவமோ வயதோ ஒருவரின் மேன்மயைக் உணர்த்துவதல்ல. திருக்குறளில், "உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேருக்கு; அச்சாணி அன்னார் உடைத்து" என்கிறார் வள்ளுவர். பெரிய வீதிகளில் உருண்டு வரக்கூடிய தேருக்கு பலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது தேர் சக்கரத்தின் அச்சாணியே ஆகும். அந்த அச்சாணியின் அளவை வைத்து அதனை எளிதாக மதிப்பிடமுடியாது. அந்த அச்சாணி இல்லையெனில் அந்த தேர் கவிழ்ந்து பேராபத்து நிலவும். உருவத்தால் யாரும் சிறியவரல்ல.

புறநானூற்றில், "ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும், 'மூத்தோன் வருக' என்னாது, அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும், கீழ்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே" என்று பாடுகிறார் பாண்டியன் ஆரியப்படைக் கடந்த நெடுஞ்செழியன் என்ற புலவர். அதாவது, ஒரே ஊரில் பலர் இருந்தாலும், வயதால் பெரியவரை அழைத்து யோசனைக் கேட்காமல், சிறியவனாக இருந்தாலும் அறிவு நிறைந்த ஒருவனை தான் அரசன் அழைப்பானாம், அவனது ஆலோசனைப்படியே அரசனும் செல்வானாம். சபையின் அனைத்து தரப்பு மக்கள் இருந்தாலும், கற்றவனுக்கே மதிப்பு அதிகமாம். அவனையே பேதமின்றி அனைவரும் போற்றுவாராம். மேன்மக்களும் அவனையே போற்றுவார்கள் என்கிறார் சங்ககால புலவர்.

அறிவு என்பது ஏட்டறிவால் வருவது அல்ல. ஏட்டறிவு மட்டும் ஒருவனை சிறந்தவனாக்காது. பெரியோரிடம் மரியாதை, அன்பு, பொறுமை, சத்தியம், தயை, அமைதி, பக்தி, வைராக்யம், ஆணவம் இல்லாமை மற்றும் உயர்ந்த ஞானம் போன்ற குணங்களே அவனை அறிவுடையோனாக்கும். 

இதனையே ஔவையாரும், "உருவம் மற்றும் வயது ஆகியவற்றால் சிறியவன் என்று இகழப்படுவோனும், அவன் செய்யும் அறிவுசார்ந்த காரியங்களாலும் அவனது குணத்தாலும் அனைவராலும் விரும்பப்படுவோன் ஆகிறான்" என்று மேலே உள்ள வரிகள் மூலம் உணர்த்துகிறார்.


 

Comments

Popular posts from this blog

சிவபாதசேகரன் – ஒரு பாடம்!

A birthday tribute to the unifier!

மூத்தோர் சொல்