ஞானம்!
உலக நாடுகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. நமது பாரத திருநாட்டிற்கு உள்ள பெருமை வேறு எந்த நாட்டிற்கும் கிடையாது. நமது நாட்டில் எங்கு எடுத்தாலும் ஞானிகளுக்கு பஞ்சமே கிடையாது.
அறிவு என்பது புத்தகங்கள் மூலமாகவும், முறையான கல்வி மூலமாகவும் பெறப்படுவது. இதனைப் பயன்படுத்தும் விதத்தில் இது பயனளிக்கும். நன்மைக்கும் பயன்படும் தீமைக்கும் பயன்படும். இன்று நாம் காணும் அனைத்து வளர்ச்சிக்கும் மனித அறிவே காரணம். இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் நாட்டின் மீது அணுகுண்டு வீசி, அந்நாட்டைப் பேரழிவிற்கு உள்ளாக்கியது அமெரிக்கா என்பது நாம் அறிந்ததே. அமெரிக்காவின் வெற்றிக்காக அணுகுண்டை ஜப்பான் நாட்டின் மீது உபயோகிக்கலாம் என்ற அறிவுரையை அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான ஃப்ராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டிற்கு புகழ்ப்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வழங்கினார். அந்த அணுகுண்டால் ஏற்ப்பட்ட விளைவை நாம் விவரிக்க வேண்டியது இல்லை. தன் தவற்றை உணர்ந்த ஐன்ஸ்டீன், "இத்தகைய மோசமான விளைவை இந்த அணுகுண்டு விளைவிக்கும் என்று உணர்ந்திருந்தால், இந்த யோசனையை அளித்திருக்க மாட்டேன்." என்று ஜனாதிபதிக்கு பிற்காலத்தில் தாம் எழுதிய கடிதம் ஒன்றில் வருத்தத்துடன் தெரிவிக்கின்றார். தன்னுடைய நிகரற்ற அறிவால் அறிவியல் உலகிற்கு பல அற்புதங்களைத் தந்துள்ளார் ஐன்ஸ்டீன் என்பதை மறுக்க முடியாது.
அறிவு எல்லையில்லா அதிசயங்களை செய்ய வல்லது. அதே சமயத்தில், அறிவு செருக்கு ஏற்பட்டால் அதனுடைய ஆபத்தும் அளவிட முடியாது.
ஞானம் என்பது தம்மை உணர்வது. தம்மை உணர்தலே நமது பாரதீய தத்துவம். இந்த ஞானம் ஏட்டுக்கல்வியினால் வருவது அல்ல. கடுமையான தவ வாழ்வால் வருவது. உலகில் அணுவைப்பற்றி John Dalton பேசுவதற்கு பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் "வைசேஷிக தர்ஷன்" என்ற தாம் எழுதிய நூலில் அணு அறிவியலைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் கஷ்யபர் என்ற முனிவர். ஔவையாரும் "ஓர் அணுவினைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி" என்று அணுவைத்துளைக்க முடியும் என்பதை உணர்த்துகிறார். இன்று பேசப்படும் அறுவை சிகிச்சைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் சுஷ்ருதர் என்ற முனிவர். இவர் "அறுவை சிகிச்சைக்கு தந்தை" என்று போற்றப்படக்கூடியவர். இவை அனைத்தும் ஏட்டறிவால் வந்தது கிடையாது. ஞானத்தால் உதித்தது. கடுமையான தவ வாழ்க்கையினால் கிடைத்த மாபெரும் ஞானம். இத்தகைய ஞானம் பெற்றோருக்கு பலவிதமான ஆத்ம குணங்கள் உண்டு. அத்தகைய குணங்கள் உலகத்தாரை நல்வழிப் படுத்துமே தவிர ஒருபோதும் உலக அழிவிற்கு வித்திடாது. இறைவனை உணர்ந்த அத்தகைய ஞானியரிடத்திலேயே அத்தகைய ஆத்ம குணங்களைக் காண முடியும். இதுவே பாரத தேசத்தின் சிறப்பு.
ஔவையாரும் அத்தகை மெய்ஞானம் பெறோருக்கு சுற்றத்தால் வரும் தொந்தரவுகளும் சினம் உள்ளிட்ட எதிர்மறை குணங்களும் இல்லை என்கிறார்.

Comments
Post a Comment