Posts

சிவபாதசேகரன் – ஒரு பாடம்!

Image
  சிவபாதசேகரன் – ஒரு பாடம்! பார் அளக்க பாரதத்தில் பிறந்தவர் அருள்மொழிவர்மன் . சோழர்களின் பெருமையை உலகறிய செய்தவர். தமிழர்களின் வீரத்தை பற்பல வெற்றிகளால் பறைசாற்றியவர். நுணுக்கமான அறிவும், திறன்மிகு போர் உத்திகளும், வல்லமை மிக்க கடல் வாணிபங்களும், சலைக்காத சமயப் பற்றும் இவரை இராசராசனாக்கியது. இரண்டாம் பராந்தக சோழனுக்கும் வானவன் மாதேவிக்கும் மகனாக ஐப்பசி சதயம் கிபி 947 ஆம் ஆண்டு சோழர்களுக்கு உட்பட்ட தஞ்சையில் பிறந்தார். பெற்றோர்கள் இவருக்கு இட்டபெயர் அருள்மொழிவர்மன். அவரது 1078 ஆவது பிறந்த நாளில் அவரது அளப்பரிய ஆற்றலை சற்றே அனுபவிப்போம். சோழர்களை உலகமறியச் செய்த படையெடுப்புகள்: காவேரி ஆற்றுப் படுக்கையின் ஓரத்தில் சில மகாணங்களின் அரசாக இருந்த சோழ பேரரசை விரிவடையச் செய்தவர் இராசராசன். தனது மகனான இராசேந்திர சோழனுக்கும் திறம்பட போர்வித்தைகளை பயிற்றுவித்து காந்தளூர் துறைமுகத்தைத் தாக்கச் செய்தார். காந்தளூர் துறைமுகத்தை கைப்பற்றியதன் மூலம் மேற்கில் சேரர்களின் ஆட்சியை சோழ பேரரசினுள் கொண்டு வந்தார். சேரர்களின் மலையம், கொங்கணம் மற்றும் துளவம் ஆகிய மூன்று அரசுகளையும் இராசராசன் வென்றதால் ...

A birthday tribute to the unifier!

Image
  A birthday tribute to the unifier!   In 1947, India was like a piece of broken glass attached to a single frame. There were 565 princely states across India. Imagine a government at the centre ruling over 565 independent heads of princely states! Will that be a viable task? British gave three options for those princely states. They can either join India or Pakistan or remain Independent. Most of the princely states joined India. If I simply say that the majority of princely states joined India, it would be really a mischief to Sardar Patel. This invincible leader with the strong vision in his mind, bold moves in his foots and with a deep message in his hearts spoke to the heads of the independent princes and made them join India. The strong message he carried in his heart and for those independent rulers was, “Our internal quarrels, envy and enmity have contributed to our defeats at the time of the foreign invasion. Let us not repeat the mistake and get caught in the net of ...

பெற்றோரைப் பேணுவோம்!

Image
இளமையும் முதுமையும் வயதால் மட்டும் வருவதல்ல. வெளிப்புறத் தோற்றம் ஒருவரை இளமையாக காட்டினாலும், மனதளவில் துவண்டு, எப்போதும் சோர்ந்து, எதெற்கெடுத்தாலும் மனதில் கவலை மற்றும் பிற எதிர்மறையான எண்ணங்கள் நமது பலத்தைக் குறைத்துவிடுகின்றன. மனதளவில் பலத்தைக் குறைக்ககூடிய செயல்கள் நமது பலத்தைக் குறைப்பது போல, இளைமையில் வீர்யத்துடன் நாம் செய்ய வேண்டிய நற்செயல்களையும் செய்ய முடியாமல் சென்றுவிடும்.  முதுமையான காலத்தில் மகிழ்வுடன் இருப்பது மிகவும் அவசியம். முதியவர்களுக்கு அத்தகைய மகிழ்வானது தங்களது பிள்ளைகளாலேயே பெரும்பாலும் கிடைக்கும் . இளமையில் மனதளவில் பலத்தை இழந்தவர்கள், பெற்றோர்களுக்கு செய்யும் கடமைகளையும் மறந்து செய்ய முடியாமல் தவிக்கின்றனர். அத்தகைய தவிப்பு, அவர்களின் மனதை வறுத்தமுறச் செய்கின்றது. சிலருக்கு, தங்களின் பெற்றோர்கள் குறித்த கவலை ஏதும் இல்லாமலும் இருக்கின்றனர். இக்காலத்தில், ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம் ஆகியவை நிரம்பி வழிவதைக் காண்கின்றோம். நமது பாரத திருநாட்டில், பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்ட மதிப்புகள் நாளடைவில் சீர்குலைந்து வருகின்றன. இளைஞர்கள் மனதளவில் பலமாக இருந்தால்...

ஈகை அளிப்போம்!

Image
பொருள் ஈட்டுவதற்கு அனைவரும் ஒவ்வொருவிதமான தொழிலைச் செய்கின்றோம். கடின உழைப்பால் ஈட்டிய செல்வத்தை நமது தேவைகளைக்கு ஏற்ப செலவு செய்கின்றோம். செலவு செய்யும் முறையில் அனைவருக்கும் வேறுபாடுகள் ஏராளமாக உண்டு. சிலர் மிகவும் தாராளமாக செலவு செய்வார்கள், சிலர் மிகவும் குறைவாக செலவு செய்வார்கள். அது அவரவர்களின் விருப்பம். எவ்வளவு வருமானம் வந்தாலும் அடிப்படை செலவுகள் என்பது யாரும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. இந்த அடிப்படை செலவுகளில் ஒருப்பகுதி அறம் சார்ந்த காரியங்களுக்கு செலவிடுவது மிக அவசியம். அறம் சார்ந்த காரியங்களுக்கு மிகப் பெரிய தொகையை செலவிட நேரிடும் என்று நாம் அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கின்றோம். நமது வருமானத்திற்கு ஏற்ப மிகச் சிறிய தொகையையாவது அத்தகைய நற்செயல்களுக்கு ஒதுக்க வேண்டும். ஈகை குணத்திற்கு தொகை அவசியமில்லை, மனமே அவசியம். அத்தகைய நற்செயல்களுக்கு அளிப்பது 'செலவு' கிடையாது. அவை 'ஈகை' ஆகும்.   "ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை; வைத்திழக்கும் வன்கண் அவர்" என்று கூறுகிறார் திருவள்ளுவர். அதாவது, தாம் ஈட்டியப் பொருளைக் காப்பாற்றி வைத்து, அதைப்...

நமக்கு நாமே!

Image
மனதைக் காட்டிலும் ஒருவருக்கு சிறந்த நண்பரும் இல்லை, சிறந்த எதிரியும் இல்லை. மனதில் தோன்ற கூடிய எண்ணங்களே அனைத்து விதமான செயல்களுக்கும் காரணமாக அமைகிறது. நாம் செய்யக்கூடிய எந்தவித செயல்களும் தன்னிச்சையாக அமைந்தது என்று கூறிவிட முடியாது. திடீரென்று ஒரு செயலைச் செய்தாலும், என்றோ ஒருநாள், அதற்கான எண்ணம் நமக்குள் தோன்றியிருக்கும். அத்தகைய எண்ணத்தின் வெளிப்பாடே நமது செயல்கள் ஆகும். தெரியாமல் செய்த பிழைகள் என்று ஒன்றும் இருக்க முடியாது. அதைச் செய்த நேரம் வேண்டுமானால் தற்செயலாக நடந்து இருக்கலாம், பிழைகள் தற்செயலாக நடந்திருக்க முடியாது. முன்பு ஒருநாள் அச்செயல் குறித்த எண்ணம் மனதில் தோன்றியிருக்கும். அன்றே, இந்த எண்ணம் நமக்கு தேவையற்றது என்று விலக்கி இருந்தோமேயானால், பின்பு திடீரென்று அச்செயலைச் செய்வதற்கான வாய்ப்புகள் வந்திருக்காது. நேர்மறையான எண்ணங்கள் வரும்போது, அதை ஊக்குவிக்க வேண்டும். எதிர்மறையான எண்ணங்கள் வரும்போது, துளிர்விடும்போதே அதை கிள்ளி எறிதல் வேண்டும். அவ்வாறு, நமது எண்ணங்களைத் தூய்மைப் படுத்த சான்றோர்களுடன் சேர்ந்து இருப்பதே சிறந்த வழியாக அமையும். "மனதை மீறி நடக்கும் குற்றம்...

சான்றோர்களின் சார்பு!

Image
மனம் போன போக்கில் வாழ்ந்து விடுவது அல்ல வாழ்க்கை. ஒவ்வொரு செயலிலும் நல்லது எது, தீயது எது, என்று ஆராய்ந்து முன்னெடுப்பதே சிறந்த வாழ்வாக அமையும். எதன் அடிப்படையில் ஒவ்வொரு செயலையும் நாம் ஆராய முடியும்? நமக்கு தோன்றுவதனால் ஒரு செயல் நல்லதாகவும் தீயதாகவும் ஆகி விடாது. நமக்கு தோன்றும் எண்ணங்கள், நம்முள் கட்டமைக்கப்பட்டிருக்கும் பழக்க வழக்கங்கள் மற்றும் கொள்கைகளின் வெளிப்பாடு. அது அனைவருக்கும் பொதுவானதாக இருக்குமா என்பது சந்தேகமே! அது முழுவதுமாக நல்லதாகவும் இருக்காது, முழுவதுமாக தீயதாகவும் இருக்காது. இந்த இடத்தில் தான் நாம் சற்று தெளிவோடு இருப்பது அவசியமாகிறது. இத்தகைய சமயங்களில், நாம் முற்றும் அறிந்த சான்றோர்களை அணுகி, அவர்களை வணங்கி ஆலோசனை பெறுதல் அவசியமாகிறது.   தத் வித்தி ப்ரணிபதேன பரிப்ரஶ்நேந ஸேவாயா உபதேக்ஷ்யந்தி தே ஞானம்  ஞானினஸ்தத்வ-தர்ஷினா  (ஸ்ரீ பகவத் கீதா 4.34) பகவான் கிருஷ்ணர், கீதையின் நான்காவது அத்யாயத்தில் , " உண்மையான ஞானத்தை முற்றும் அறிந்த ஞானிகளிடமிருந்து பெறவேண்டும். அத்தகைய குருவை வணங்கி, அவர்களுக்கு சேவை செய்து, மனதில் வஞ்சகமில்லாமல் அவர்களிடம் சந்தேகங்களை...

கபடமில்லா கல்வி!

Image
கல்வி என்பது வெறும் புத்தக அறிவு மட்டுமே ஆகாது. படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் புத்தகத்தைப் படித்துவிடலாம். அவர்களுக்குப் புத்தக அறிவானது நிச்சயமாக ஏற்பட்டுவிடும். புத்தகங்களைப் படிப்பது ஒரு தகவல் பரிமாற்றம் என்ற அளவில் நின்றுவிடும். அத்தகைய புத்தகங்களை எவ்வாறு படித்திருக்கின்றோம், கல்வியை எவ்வாறு கற்றிருக்கின்றோம் என்ற பலன்கள் நடத்தையில் தான் வெளிப்படும். "கற்க கசடற கற்பவை கற்றபின்; நிற்க அதற்குத் தக" என்ற குறள் நாம் அனைவரும் அறிந்ததே. கற்பது பெரிது அல்ல, தீயவற்றை நீக்கி, நல்லவற்றைக் கற்பது தான் உயர்ந்தது. கற்றதை வெறும் அறிவாக வைத்துக் கொள்ளாமல், அதனை நடைமுறையில் கொண்டு வந்து நடந்து காட்டுவது தான் சிறந்தது.  நடத்தை என்பது யாது? பேசும் விதம், அனைவரிடமும் பழகும் விதம், சுயநலம் இல்லாமை, பொறுமை, அரவணைப்பு, ஒருத்தர் ஏதேனும் பேசும்போது அவரை கூர்ந்து கவனித்தல், தவறு நடைபெற்றால் துணிவுடன் அதை எதிர்த்தல் , ஆகிய பல விதமான விழுமியங்களே நமது நடத்தையை தீர்மானிக்கின்றன. நாம் இத்தகைய நடத்தைகளை வெளிப்படுத்த நாமாக ஏதும் முயற்சிகள் எடுக்க வேண்டாம். நாம் கற்கும் கல்வியை சரியாக கற்றோமேயானால், இ...