ஈகை அளிப்போம்!
பொருள் ஈட்டுவதற்கு அனைவரும் ஒவ்வொருவிதமான தொழிலைச் செய்கின்றோம். கடின உழைப்பால் ஈட்டிய செல்வத்தை நமது தேவைகளைக்கு ஏற்ப செலவு செய்கின்றோம். செலவு செய்யும் முறையில் அனைவருக்கும் வேறுபாடுகள் ஏராளமாக உண்டு. சிலர் மிகவும் தாராளமாக செலவு செய்வார்கள், சிலர் மிகவும் குறைவாக செலவு செய்வார்கள். அது அவரவர்களின் விருப்பம். எவ்வளவு வருமானம் வந்தாலும் அடிப்படை செலவுகள் என்பது யாரும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. இந்த அடிப்படை செலவுகளில் ஒருப்பகுதி அறம் சார்ந்த காரியங்களுக்கு செலவிடுவது மிக அவசியம். அறம் சார்ந்த காரியங்களுக்கு மிகப் பெரிய தொகையை செலவிட நேரிடும் என்று நாம் அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கின்றோம். நமது வருமானத்திற்கு ஏற்ப மிகச் சிறிய தொகையையாவது அத்தகைய நற்செயல்களுக்கு ஒதுக்க வேண்டும். ஈகை குணத்திற்கு தொகை அவசியமில்லை, மனமே அவசியம். அத்தகைய நற்செயல்களுக்கு அளிப்பது 'செலவு' கிடையாது. அவை 'ஈகை' ஆகும். "ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை; வைத்திழக்கும் வன்கண் அவர்" என்று கூறுகிறார் திருவள்ளுவர். அதாவது, தாம் ஈட்டியப் பொருளைக் காப்பாற்றி வைத்து, அதைப்...